Powered By Blogger

Saturday, February 18, 2012

கப்ஸா - 01


அர்சில் எழுதப்பட்ட கலிமா!

 நமது பழைய ஆலிம்சாக்கள் சொன்ன ஒரு கப்ஸாதான் இது! நீங்களும் கேட்டுத்தான் இருப்பீர்கள். என்ன தெரியுமா?

எங்கள் தகப்பனார் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிட்டவும் நெருங்க வேண்டாம் என்று அல்லாஹ் ஒரு மரத்தைக் காட்டிச் சொன்னான்தானே! ஷைத்தானுடைய வழிகாட்டலில் அந்த மரத்தின் கனியைச் சாப்பிட்டு அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்தானே! அப்போது அல்லாஹ் அதைப்பற்றிக் கேட்டபோது அல்லாஹ்விடம் அவர் மன்னிப்புக் கேட்டார்தானே!

அல்லாஹ்விடம் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மன்னிப்புக் கேட்டு கேட்டு எதுவுமே நடக்கவில்லை. ஒரு காலில் ஆண்டுக்கணக்கில் நின்று அழுது புலம்பிப் பாவ மன்னிப்புக் கேட்டுப்பார்த்தார். ஆனாலும் அல்லாஹ்விடமிருந்து பதிலே இல்லை! ஸுஜூதில் இருந்து தலையுயர்த்திய போது அர்சில் அவருக்கு முன்னே "லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்" என்று ஒரு கலிமா ஒளி வீசிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஆதம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடம் "முஹம்மதின் பொருட்டால் எனது பாவங்களை மன்னித்து விடு, யா அல்லாஹ்," என்று கேட்க, அல்லாஹ், "முஹம்மதைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்," என்று திருப்பிக் கேட்டான். அப்போது, அந்தக் கலிமாவைக் காட்டிக் கொடுத்தார். அல்லாஹ் உடனே ஆதம் - ஹவ்வா அலைஹுமுஸ்ஸலாம் அவர்களிருவரையும் மன்னித்து விட்டான்.


கப்ஸா மறந்திருக்க மாட்டீர்கள்! 

இப்படியான கப்ஸாக்களை விட்டுத்தான் மக்களை வழிகேட்டின் பால் அழைத்துச் சென்றார்கள், நம் முன்னோர்களில் பலர்! பலன் கப்ஸாக்களை இட்டுக் கட்டி நம்மைச் சூழவுள்ள சமூகங்கள் மத்தியில் இருக்கும் கூமுட்டைக் கதைகள் நம்மத்தியில் உலா வருவதுதான் மிச்சம்.


இவையெல்லாம், மார்க்க அந்தஸ்துப் பெற்று நபிமார்களை அல்லாஹ்வின் தரத்துக்கு, ஏன், அதைவிட மேலாக உயர்த்தி இணை வைப்பிற்கு சமூகத்தை இட்டுச் சென்றதனால் தான் இன்று நாலா பக்கங்களிலும் சவங்களைப் புதைத்து வைத்துக் கொண்டு விழாக்கள்! கொண்டாட்டங்கள்! 


சிலைகளை நிற்க வைத்தும் உட்கார வைத்தும் கடவுள் என்ற அந்தஸ்தைக் கொடுத்து ஒரு கூட்டம் அவற்றை வணங்குகிறது! மேலே சொன்னது மாதிரியான கப்ஸாக்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஒரு கூட்டம் சவங்களைப் புதைத்து வைத்துக் கொண்டு வணங்குகிறது!


அல்லாஹ்வுக்கு இணை வைப்பதுதான் பெரிய அநியாயாம்! விளங்கித் திருந்தினால் இறையருள் கிடைக்கும்; பிடிவாதமாக இருந்தால் வழிகேட்டின் தொங்கல் நரகம்தான்! அதுவும் நிரந்தர நரகம்!

(இன்னும் வரும்)